அருவிப் பெண்கள் வலையமைப்பினால் Vitol Foundation அனுசரணையின் கீழ் வாழ்வாதார பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

 

 








 மட்டக்களப்பு மாவட்ட அருவிப் பெண்கள் வலையமைப்பினால் Vitol Foundation மற்றும் வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுசரணையின் கீழ் வாழ்வாதார பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தை தொடர முடியாது  அவதியுறும் மக்களுக்கான வாழ்வாதார பொருட்கள், உபகரணங்கள், கால்நடைகள் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று தெற்கு, ஏறாவூர்ப்பற்று மற்றும் போரைதீவுப்பற்று  வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 50 பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில் இதன் முதற்கட்டமாக சிறுகடை, சிற்றுண்டி மற்றும் தூள் வியாபாரம் செய்யும் பெண்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் செயற்பாடு  மட்டக்களப்பு மாவட்ட அருவிப் பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் போரைதீவுப்பற்று, ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 18 பயனாளிகளுக்கு ரூபாய் 52,280 பெறுமதியான வாழ்வாதார பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மட்டக்களப்பு மாவட்ட அருவிப் பெண்கள் வலையமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது..