கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால், அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயார்.

 



செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டுகால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால், அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான பல்கலைக்கழக கட்டமைப்பிலும் நவீனமயப்படுத்தலின் தேவை இருப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகளை கண்டறியுமாறும் கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்திடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.