மூன்று மாகாணங்களின் ஆளுநர்களை இன்று (15) அமுலாகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்கள் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோரே பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.