மே 16ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகனப்படுத்தப்பட்டுள்ளது .

 


கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாகாண அரச திணைக்கள அதிகாரிகளுக்கியையில் இடம்பெற்ற விசேட டெங்கு ஒழிப்பு கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் மே 16ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகனப்படுத்தப்பட்டுள்ளது .
இது தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய அரச திணைகள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் இடம் பெற்றது.


கலந்துரையாடலில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மாதவன், மாநகர ஆணையாளர் என்.மதிவண்ணன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வைத்திய அதிகாரிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், கல்வித் திணைகள் அதிகாரிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், போலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதவர்கள், என பலர் கலந்து கொண்டனர்.