இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 


பொரள்ளை, லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இன்று (20) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த நபர் ஒருவரை பிறிதொரு உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.