மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்--2023










 

 

 (கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன்  ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமானது.

அன்றிலிருந்து  07 தினங்கள் விஷேட பூசை நிகழ்த்தப்பட்டு, சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வருகிறார்.

எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  தீ மிதிப்பு  வைபவம் இடம் பெறுவதோடு ,சமுத்திர நீராடல் ,பொன்னூஞ்சல்,  அன்னதானம்  போன்ற நிகழ்வுகள் இடம் பெற உள்ளன .

ஆலய உற்சவக் கிரியைகள் யாவும் ஆலய பிரதமகுரு பால சதீஸ்வரக்குருக்கள் தலைமையில் நிகழ்த்தப்படுகின்றன.