மட்டக்களப்பில் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியொருவர் இன்று புதன்கிழமை (31) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கு அண்மையில் உள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியொருவர் இன்று புதன்கிழமை (31) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வண்டிங்ஸ் வீதியைச் சேர்ந்த திருச்சந்திரன் ஸஹரா (வயது- 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவி பிற்பகல் 2.00 மணியளவில் கல்லடிப் பாலத்தில் குதித்திருக்கலாம் எனப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பொருட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சடலத்தை எடுத்துச் செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.