போதையூட்டும் குளிசைகள் 400 யை வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது

 


முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர்., பேலியகொடையில் வைத்து மே.30ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை துட்டகைமுனு பிரதேசத்தில் அன்றையதினம் இரண்டு சுற்றிவளைப்பு தேடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, போதையூட்டும் குளிசைகள் 400 யை வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டனர்.

28 வயதான இருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.