பலசரக்கு வர்த்தக நிலையமொன்று இனந் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டு, 9 இலட்சம் ரூபா பணமும் சூறையாடப்பட்டுள்ளது.

 


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில், பலசரக்கு வர்த்தக நிலையமொன்று இனந் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, வர்த்தக நிலையத்திலிருந்த
9 இலட்சம் ரூபா பணமும் சூறையாடப்பட்டுள்ளது.


நேற்றிரவு வர்த்தக நிலைய உரிமையாளர் கடையை மூடிவிட்டு வீடு சென்றுள்ளார்.
அதிகாலை 2.30 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதாக கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்குச் சென்ற பார்த்தபோது, கடை தீக்கிரையாகியிருந்ததோடு, அங்கிருந்த 9 இலட்சம் ரூபா பணமும் சூறையாடப்பட்டமை தெரியவந்தது.


ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று
விசாரணைகளை முன்னெடுத்தனர்.


சீ.சீ.ரிவி காணொளியின் உதவியுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.