அரசை கவிழ்க்க முனைவது ஒரு பயங்கரவாத செயல் .

 


அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுக்கு உரிமை உண்டு, ஆனால் அரசை கவிழ்க்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் இது ஒரு பயங்கரவாத செயல் என்று தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்களால் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று வலியுறுத்தினார். 

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுடன் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (15)  இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.