இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரை படுகொலைச் செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவரை குற்றவாளிகள் என இனங்கண்ட மேல் நீதிமன்றம் அந்த அறுவருக்கும் மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
திருமணம் முடிக்காத நபரொருவர் சிங்களப் புத்தாண்டு தினத்தன்று படுகொலைச் செய்யப்பட்டார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றச்சாட்டப்பட்டிருந்த அறுவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியதால், ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் அந்த அறுவருக்கும் செவ்வாய்க்கிழமை (23) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கால்நடை தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த மோதலில் 30 வயதான திருமணமாகாத நபர் குற்றம் சாட்டப்பட்டவர்களால் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 15 பேர் விடுதலைச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.