மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் தனியார் விடுதியில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளில் டேவிட் பீரிஸ் குழுமத்தினால் சமூக நேய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


கிழக்கு மாகாணத்தில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளில் டேவிட் பீரிஸ் குழுமத்தினால் சமூக நேய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் தனியார் விடுதியில்


சுயமுயற்சியாண்மையாளர்களுக்கான பயிற்சி அசட்லை பிராந்திய முகாமையாளர்
ஜயசுதன் ஏற்பாட்டில் இன்று இடம் பெற்றது.

தொழில் முயற்சியில் ஈடுபடும் முயற்சியாளர்களை புதிய உத்வேகத்துடன் தமது தொழிலை முன்னெடுத்து விரிவு படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல் வளவாளர் ஆதித்தன் அருண்தவராஜாவினால் வழங்கப்பட்டது.

நிகழ்வில் டேவிற் பீரிஸ் குழும தலைமை சந்தைப்படுத்தல் அலுவலர் அஜந்த பிரேமஸ்ரீ மற்றும் குழும அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.