இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த பட உள்ளது .

 


இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல வெளிநாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.