வடக்கு கிழக்கு தழுவியரீதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ், அம்பாறை திருக்கோயில் பிரதான சந்தைவளாகத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினருடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
பொத்துவில் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. பொத்துவில் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்ட பகுதிக்கு திடீரென ஜீப்ரக வாகனத்தில் வருகை தந்த பொலிசார் மாணவர்களிடம் விசாரித்து பின்னர் சற்று நேரம் கண்காணித்திருந்த நிலையில், புலனாய்வாளர்கள் என சந்தேககிக்கப்படுவோரும் ஒளிபடங்களைப் பதிவு செய்தனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வடக்குப் கிழக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் அம்பாறையில் நிறைவு பெற்ற நிலையில் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் முள்ளிவாய்க்கால் நினைவுகஞ்சி பகிரப்படவுள்ளது.