இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஓய்வூதிய திட்டமான ஆரக்ஷாவ ஓய்வூதிய திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் அண்மையில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலக சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.
இவ்ஓய்வூதிய திட்டத்தில் அங்கத்தவராக இணைந்து கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஜி.சாருகேசன் எனும் மாணவனுக்கான 10,000 ரூபாய் பெறுமதியான காசோலை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் பாடசாலை அதிபர் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இச்சமூக பாதுகாப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஓய்வூதிய திட்டமான ஆரக்ஷாவ ஓய்வூதிய திட்டம் பிள்ளைகளுக்கு இளவயதிலே ஓய்வூதியம் உரித்தாவதை உறுதிப்படுத்துதல், சுதந்திரமாக மேற்கொள்வதற்கான தொழிலினை மேற்கொள்ளத் தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.