மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான நான்காவது ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் (16) திகதி நடை பெற்றது.
2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் அரசாங்க அதிபர் இதன்போது கலந்துரையாடினார்.
இதன்போது மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில் நுட்பம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை மேம்பாடு போன்ற பல துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு மிக அவசியமாக தேவைப்படும் திட்டங்கள் தொடர்பான அறிக்கை யூலை மாதத்திக்கு முன்னர் முடிவுருத்தப்பட வேண்டும் என்பதுடன் எனைய பிரதேச மட்ட திட்டங்கள் யூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் மேலதிக கலந்தாய்விற்கு ஏற்ற வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொறியியலாளர்கள், பணிப்பாளர்கள், பிரதி பணிப்பாளர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.