கல்லடியில் இராமகிருஷ்ணத் துறவிக்குப் பெரு வரவேற்பு!



(கல்லடி செய்தியாளர்- க.கிருபாகரன்  )

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிசனின் ஏற்பாட்டில் உலகளாவிய இராமகிருஷ்ணமடம், மிஷனின் துணைத் தலைவர் மற்றும் சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ணமடத்தின் தலைவருமான அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தாஜீ மகராஜ் நேற்று வியாழக்கிழமை இன்று (18) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

சுவாமிகளை வரவேற்கும் முகமாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்தடியிலிருந்து மேளவாத்தியங்கள் முழங்க, பண்பாட்டுப் பேரணி பக்தி உணர்வு மேலோங்க, மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ண முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ மகராஜ் தலைமையில் இராமகிருஷ்ணத் துறவிகள், அடியவர்கள் புடைசூழ, சுவாமிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

இப்பேரணியில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள், பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் கலந்து கொண்டனர்.