மட்டு. மேற்கு கல்வி வலயத்தில் முதன்முறையாக சமூக விஞ்ஞானக் கண்காட்சி!



(கல்லடி செய்தியாளர்)


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் நடாத்தும் சமூக விஞ்ஞானக் கண்காட்சி நாளை வியாழக்கிழமை (25) கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகிறது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ள கண்காட்சியில், மாகாணக்கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிறப்பு அதிதிகளாகவும்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

குறித்த கண்காட்சி காலை 9மணிமுதல் 4மணிவரை நடைபெறவுள்ளது.