மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்த்து மாதா அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கலுடன் நிறைவுற்றது.

 
































 

 மட்டக்களப்பு நாவற்குடா சின்ன லூர்த்து மாதா அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கலுடன்  ஞாயிற்றுக்கிழமை (14) காலை நிறைவுற்றது.

இதன்போது ஆலயப் போதகர் கே.ஜேசுதாசன் மற்றும் உதவிப் போதகர்  அலஸ் ஆகியோரின் பங்கேற்புடன் இறுதிநாள் பூசைகள் ஒப்புக் கொடுக்கப்பட்டது. அத்தோடு அருட்தந்தையர் கௌரவிப்பும் நடைபெற்றது.

இக் கொடியிறக்கத்தில் ஆலயப் பங்கு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாலய உற்சவம் இம்மாதம் 5 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.