காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


 

பண்டாரவளை – கொஸ்லாந்தை – மேல் தியலும பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில், காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த இருவரும், தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும், மாத்தறை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியுமே, குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்ற நிலையில், இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம், நீதவான் பரிசோதனைக்காக சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்லாந்தை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.