புலம்பெயர் தேசத்திலிருந்து பணம் அனுப்புவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

 


புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2023 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இதனை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.