மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

 


மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் இதனை தெரிவித்தார். 

2023 ஆம் ஆண்டு இந்த விலை அதிகரிப்புடன் இலங்கையில் மது பாவனை குறைந்துள்ளது எனவும் இந்த வருடத்தின் இந்த சில மாதங்களில் 30 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது என்றும் பதில் நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதனால்  விலையை குறைக்க முடியாது. மதுபானங்களின் விலையை குறைக்க அரசு தயாராக உள்ளது என்பதை கடந்த வாரம் சமூக வலைதளங்களில் பார்த்தேன். ஆனால், நம்மால் குறைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.