(கல்லடி செய்தியாளர்)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாநகர சபையினால் கல்லடிக் கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டமொன்று இன்று காலை 7.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டது.
இத்தூய்மைப்படுத்தல் மாநகர சபை ஆணையாளர் எஸ். மதி வண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்லடி கடற்கரையை அண்டிய பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள், சொப்பின் பைகள் என்பன அகற்றப்பட்டன.