மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனைப்பற்றுக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழி தின போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை (26) ஆரையம்பதி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மண்முனைப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தில்லைநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலய உயரதிகாரிகள், கோட்ட மட்டப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.