கல்லடி கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!



(மட்டக்களப்பு நிருபர்-க.கிருபாகரன்)

















தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுகூரல் கல்லடி கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (18) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நினைவுகூரலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிர்நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு இறுதியில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்திற்காக கடலில் பூக்கள் போட்டு வேண்டிக் கொண்டனர்.