ஏறாவூர் தள வைத்தியசாலையின் கிளினிக் பிரிவான சாய் சாலை தனிப் பிரிவாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

 









ஏறாவூர் தள வைத்தியசாலையில் சாய் சாலைப் பிரிவு தனியாக செயற்பட ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் தள வைத்தியசாலையின் கிளினிக் பிரிவான சாய் சாலை அண்மையில்  தனிப் பிரிவாக சேவை வழங்குவதற்காக வைத்தியர்களின் விடுதித் தொகுதிக்கு உத்தியோக பூர்வமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஏறாவூர் தள வைத்தியசாலை
வைத்திய அத்தியட்சகர் எஸ். சசிகுமார் தலைமையில் இடம்பெற்றதுடன், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி. சுகுணன் மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்திய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு பல வருடங்களாக இட நெருக்கடிக்கு மத்தியில், பல்வேறு சிரமங்களுடன் வைத்தியசாலையின் பிரதான வெளிநோயாளர் பிரிவோடு இணைந்ததாக இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.