வறிய நிலையில் உள்ள பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தினை உயர்த்துவதற்கு
முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி
‘ஊட்டச்சத்து உணவுகளின் கண்காட்சிகள்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு
வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் மட்டக்களப்பு தாதியர் பாடசாலையும் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.
வவுணதீவு
சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி அனட் ஜோதிலக்ஸ்மி தலைமையில்
நடைபெற்ற காண்காட்சியில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் டொக்டர் கே.சுகுணன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி
அகிலா கனகசூரியம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சுதாகர்,கிழக்கு மாகாண
சுகாதார பயிற்சி நிலைய பணிப்பாளரும் சமூக வைத்தியருமான டாக்டர் அ.லதாகரன்
உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
ஐந்து வயது முதல் பிள்ளைகளுக்கு
வழங்ககூடிய ஊட்ட சத்திகள் கொண்ட உணவுகள் பெருமளவில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் அது தொடர்பான விளக்கங்களும்
வழங்கப்பட்டன.
தாய்பால் ஊட்டும் தாய்மார் மற்றும் சிறிய பிள்ளைகளைக் கொண்ட தாய்மார் உட்கொள்ளவேண்டிய உணவுகள் தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.