குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் "கிருஷ்ண கீதங்கள்" இறுவட்டு வெளியீட்டு விழா கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா வும் மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ மகராஜ் ஆத்மீக அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
கிருஷ்ண கீதங்கள் இறுவட்டு பற்றிய நயவுரையை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் காலநிதி நிர்மலேஸ்வரி பிரசாந்த் வழங்கினார்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு செயலாளர் எம். கோபாலரத்தினம், மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி, உள்நாட்டு இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் ரி.குணராஜா மற்றும் ஏறாவூர் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.