மதுபானத்தின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 


மதுபானத்தின்  விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மதுக் கொள்வனவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே இதைக் கருத்தில் கொண்டு சாமான்ய மக்கள் மலிவு விலையில் மதுவைக் கொள்வனவு செய்ய அனுமதிக்குமாறு நாட்டின் முன்னணி மது உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் நிதியமைச்சு, இலங்கை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் நாட்டின் முன்னணி மது உற்பத்தியாளர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.