(கல்லடி செய்தியாளர்க.கிருபாகரன்)
மட்டக்களப்பு கல்வி வலய வரலாற்றுப் பாடப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலை மாணவர்களின் வரலாறு சம்பந்தமான ஆவணப்படுத்தல் கல்விக் கண்காட்சி இன்று வியாழக்கிழமை (18) மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வரலாறுபாட ஆசிரிய ஆலோசகர் த. குருபரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயாகரன், தாபனங்கள் மற்றும் கோவைப்படுத்தலுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.ஹரிகரராஜ், ஆசிரிய ஆலோசகர்களான திருமதி சிவசாந்தி விமலதர்ஷன், சி. சிவகுமார் மற்றும் வலயப் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயப் பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வரலாறு சம்பந்தமான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மாகாண ரீதியாக நடைபெறும் கண்காட்சிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.