மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதை தவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 


வடமேல் மாகாணத்தில் சுமார் 2000 மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,  வடமேல் மாகாணத்தின் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது உகந்ததல்ல என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதிவாகியிருந்த தோல் கழலை நோய் வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலும் தற்போது பரவியுள்ளது.