எதிர்வரும் இரண்டு மாதங்களில் மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 


மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை கண்காணிக்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மதுபானம், பியர் விற்பனை மிகக் குறைந்த அளவில் இருப்பதால் மதுவரி வருவாயிலும் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்ட நிதியமைச்சு கலால் திணைக்களம் உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியவற்றிற்கு கலால் வரியை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானிப்புகளை வழங்குமாறு அறிவித்துள்ளது.

கலால் வரியை குறைக்க வாய்ப்பு இருந்தால் மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு மாதங்களில் மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோத மதுபான பாவனையை மக்கள் நாடியமையினால் மதுபானத்தின் விலை உயர்வினால் பல சுகாதார பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.