(மட்டக்களப்பு நிருபர்)
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியத்தின் விஷேட பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாகத்துக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயாகரனின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) டெங்கு ஒழிப்புச் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதானத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதன்போது டெங்கு பரவுவற்கான இடங்கள் துப்பரவு செய்யப்பட்டதோடு, சிரட்டைகள், போத்தல்கள் வேறாக்கப்பட்டு மாநகரசபை துப்பரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
க.கிருபாகரன்
மட்டக்களப்பு நிருபர்