எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளது

 


QR முறைமையின் கீழ் வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக பிரிவுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.