மட்டக்களப்பில் பெண் தலைமை தாங்கும் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் விநியோகம்..

 



 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் சந்திவெளி கிராமத்திலுள்ள பெண் தலைமை தாங்கும் மற்றும் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது இப்பெண் தலைமை தாங்கும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 25 பேருக்கு ஒருவருக்கு தலா ரூபா 25000.00 பெறுமதியான கோழிக்குஞ்சுகள் மற்றும் அவற்றிற்கான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், கணக்காளர் அ.டிலானி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீபா நெல்சன், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கனிஷ்கா சேதனபசளை நிறுவனத்தின் முகமையாளர் ஏ.மோகனேஸ்வரன், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான நிதி அனுசரணையை கனிஷ்கா சேதனபசளை நிறுவனத்தின் முகமையாளர் ஏ.மோகனேஸ்வரன் தமது முயற்சினால் பிரதேச செயலகத்திற்கு பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.