மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 

 


 கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை கஹடபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.