மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் "கா" கலை இலக்கிய கலை வட்டத்துடன் இணைந்து நடத்திய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா!


























(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டம் "கா" கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து நடத்திய அம்பலவன் புவனேந்திரன் எழுதிய "வேர்களையறியா விழுதுகள்", "கார்மலி சொன்ன காதை" ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (21)  மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 மட்டக்களப்பு தருமபுரம் தருமரெத்தினம் வித்தியாலய அதிபரும், எழுத்தாளருமான ச.மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் கலந்து கொண்டார்.

இங்கு வெளியீடு செய்யப்பட்ட "வேர்களையறியா விழுதுகள்", "கார்மலி சொன்ன காதை" ஆகிய இரு கவிதை நூல்களின் முதல் பிரதிகளை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பெற்றுக் கொண்டார்.

"வேர்களையறியா விழுதுகள்" நூலுக்கான அறிமுகவுரையினை பேராசிரியர் செ.யோகராசாவும், "கார்மலி சொன்ன காதை" நூலுக்கான அறிமுக உரையினை கோவிலுர் செல்வராஜனும், வாழ்த்துரையினை செங்கலடி மறைக்கோட்ட முதல்வரும், கல்குடா புனித ஆரோக்கியமாதா ஆலய பங்குத் தந்தையுமான அருட்பணி செபஸ்தியான் இக்னேசியஸும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், பேராசிரியர் எஸ்.கென்னடி, எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.