மட்/மண்முனை மேற்கு கல்வி வலய தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் முதல் மும்மொழிக் கதம்ப நிகழ்வு கடந்த 03 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் தி.பத்மசுதன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை எங்குமே நடந்திராத வகையில் மட்/மண்முனை மேற்கு கல்வி வலய தாண்டியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில், பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனையும் வழிகாட்டல் பொறுப்பாசிரியர் ரோஜா ரமணி இருதநாதயன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடாத்தப்பட்டு இப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக எஸ்.மகேந்திரகுமார் மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம் ), அவர்களும், அதிதிகளாக எஸ்.முருகேசப்பிள்ளை மண்முனை மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர், கே.சிறிபிரேமசாயிசிவம், பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர், ஏ.அனுலா திட்ட இணைப்பாளர் ஏயூலங்கா, பி.சதீஸ்குமார், தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர், ஜி.ஜுட்ஸ்குமார்,வளவாளர் ஆங்கிலம், எம்.மாணிக்கவாசகம் சிங்கள பாட ஆசிரிய ஆலோசகர் ரி.குணரெத்தினம், ஆசிரிய ஆலோசகர் (ஆலோசனை வழிகாட்டல்), ம.சதீஸ்குமார், தலைவர் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் மாணவர்களின் மும்மொழியிலான பல்வேறு வகையான கலைப்படைப்புக்களும் அரங்கேற்றப்பட்டது.
ஏயூலங்கா நிறுவனத்தின் நிதி அனுசரனையில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது