ஸ்ரீ இராமகிருஷ்ணமிஸனின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வுகள்!



































க.கிருபாகரன்
கல்லடி செய்தியாளர்


மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஸனின் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (20) கல்லடி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஸன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உலகளாவிய ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத் தலைவரும், சென்னை ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜீ மகராஜ் ஆசியுரை வழங்கினார்.

இதன்போது இராமகிருஷ்ணமிஸன் சேவைப் பணிகளில் இணைந்து செயற்படும் மட்டக்களப்பு, அம்பாறை இந்து ஆலயங்கள், மன்றங்கள், தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றிற்கு நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு சுவாமி கௌதமானந்தஜீ மகராஜின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்து மாணவியொருவர் சுவாமிஜீயிடம் கையளித்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, மண்முனை- வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ம.செல்வராஜா, முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், மட்டக்களப்பு  வர்த்தக சங்க இந்து ஒன்றிய உறுப்பினர்கள், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தினர, விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையினர் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.