தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


அபுதாபியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2021ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் பணிக்காக அபுதாபி சென்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தின் போது மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.