கிளிநொச்சி - உருத்திரபுரத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படவிருந்த நில அளவைகள் தாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தப்படடுளள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.