பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு பேரவை இதற்கான அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கான புதிய பதவி உயர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.