இலங்கையில் பயிற்சி பெற்ற தாதியர்கள் சிங்கப்பூர் அரச வைத்தியசாலைகளில் தொழிலுக்காக செல்லும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
அந்தவகையில், தாதி தொழில்துறை தொடர்பான பட்டம் அல்லது உரிய பயிற்சி மற்றும் அரச தாதி கல்லூரிகளில் இருந்து வெளியேறிய அனுபவமிக்க தாதியர்களுக்கு சிங்கப்பூர் வைத்தியசாலைகளில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த செயற்பாட்டின் முதலாவது கட்டமாக 36 தாதி அதிகாரிகள் சிங்கப்பூருக்கு செல்லவுள்ளனர்.
இதற்குரிய விமான பயண சீட்டுக்கள் நேற்றைய தினம் வெளிநாட்டு
வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் உரியவர்களிடம்
கையளிக்கப்பட்டது.