கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு!


























(கல்லடி செய்தியாளர்)


கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் இன்று வியாழக்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பொதுச்சேவை  ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.நவேந்திரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், மட்டக்களப்பு கலாசார உத்தியோகத்தர் கு.குணநாயகம் மற்றும் அம்பாறை கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், மட்டக்களப்பு மாவட்ட வைத்திய அதிகாரி திருமதி மைதிலி வார்த்லட், நாவற்குடா கலாசார நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மூத்த இந்துக் குருமார்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தால் 2023/2024 ஆம் ஆண்டுக்கான வாக்கிய பஞ்சாங்கக் கையேடும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.