மட்டக்களப்பு -கல்லடி இக்னேசியஸ் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் உபகரணம் வழங்கி வைப்பு!














(கல்லடி செய்தியாளர்)

எல்.ஓ.சீ. நிறுவனத்தினால் நாடளாவிய ரீதியில் மிகவும் பின்தங்கிய 2000 பாடசாலைகளில் கல்வி பயிலும்  பாடசாலை மாணவர்களுக்கு "வாழ்வின் சக்தி" திட்டத்தினூடாக புத்தகப்பை மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 39 மாணவர்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்பித்தல் உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எல்.ஓ.சீ. நிறுவனத்தின் வடக்கு- கிழக்கு பிராந்திய திட்டமிடல் மற்றும் விரிவாக்கல் நிறைவேற்று அதிகாரி கே.ஜெய்சன், இந்நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளை உதவி முகாமையாளர் மனோகரன் மனோராஜ், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.