பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 


முந்தலம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்றவர்கள் மத்தியில் பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (21) குறித்த குழுவினர் நீராடச் சென்றுள்ள நிலையில், இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள உடப்புவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி நான்கு நண்பிகள் மற்றும் ஒரு நண்பியின் பாட்டியுடன் புச்சகுளம வாவியில் நீராடும்போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முந்தலம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.