மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதனூடாக
வன்முறை தீவிரவாரத்தை தடுத்தல் எனும் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
ஜீசெப் மற்றும் ஹெல் விடாஸ் நிறுவனங்களின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய
வேலைத்திட்டத்தின்
இறுதி நாள் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சிசிகலா புண்ணிய
மூர்த்தி, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன், மாவட்ட தகவல் அதிகாரி
ஜிவானந்தன், லிப்ற் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன்,
நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களான ஹசாந்தி, மற்றும் ரமேஸ், வலய கல்வி பணிப்பாளர்கள், தொழில்நுட்ப கல்லூரி அதிபர்கள்,
பிரதேச செயலாளர்கள், அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.