கடந்த சில வருடங்களில் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இழப்பை நிவர்த்தி செய்ய ரயில் கட்டணங்கள் மீள்திருத்தப்பட வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்காக ரயில் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ரயில்வே திணைக்களம் 2021 ஆம் ஆண்டில் ரூ. 2.6 பில்லியன் வருமானம் ஈட்டியது. 2.3 பில்லியன் ரூபாய் மேலதிக நேர கொடுப்பனவாக கொடுக்கப்பட்டது. 7 பில்லியன் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது.
2021 இல் ரயில்வே துறை மூலம் 10 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டது”, என அவர் தெரிவித்தார்.
இழப்பை சரி செய்ய கட்டணங்களை மீள்திருத்தும் போது ரயில்வே துறையிலுள்ள திறனற்ற தன்மை, மோசடி மற்றும் ஊழல் போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.