பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
அம்பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.