கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

 

கர்நாடகா சட்டசபை தேர்தலில்
ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆகையால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கிறது.

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன.

1.45 மணி நிலவரப்படி, காங்., 134, பா.ஜ.,- 65-ல் முன்னிலையில் உள்ளது…